Wednesday, 16 March 2022

காரடையான் நோன்பு

 

காரடையான் நோன்பு என்பது பெண்கள் வழிபடும் நோம்பாகும். இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள்.

இதை சாவித்ரி நோன்பு என்றும் கூறுவார்கள். இந்த நோன்பினால் கணவனுடைய ஆயுள் அதிகரிக்கும்.

சாவித்ரி ஆனிமாத அமாவாசையிலிருந்து மூன்று நாட்கள் விரதம் மேற்கொண்டாள்.

இந்த காலத்தினை சாவித்ரி விரத கல்பம் என்கின்றனர்.

பூஜை செய்யும் முறை

காரடையான் நோன்பு நாளில், பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து தலைக்கு குளிக்க வேண்டும்.

அதன்பின்னர் வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் கோலமிட வேண்டும்.

அதன் மீது ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பின் அதன் மீது நுனி வாழை இலையை வைத்து, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும்.

வாழஇலையில், வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழங்களும் வைக்க வேண்டும்.


அந்த அடையை நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு தாலிச்சரடையும் நோன்புச் சரடையும் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும்.

அதேபோல் காரடையான் நோன்பு அன்று சொல்ல வேண்டிய சில ஸ்லோகங்களை கூறி பிராத்திக்க வேண்டும்.

பூஜை செய்யவேண்டிய நேரம்

சூரிய அஸ்தமனம்: மார்ச் 14, 2022 6:31 மாலை

காரடையான் நோன்பு தேதி, நேரம்: மார்ச் 14, 6:40 காலை - மார்ச் 15, 12:21 காலை

மஞ்சள் சரடு முகூர்த்தம்: மார்ச் 15, 2022 12:21 காலை