Showing posts with label Kalki. Show all posts
Showing posts with label Kalki. Show all posts

Friday 12 August 2011

சோழ மன்னர்களின் தலைநகர்! " தஞ்சாவூர்"

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக. 
குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தன் மணாளனாகிய சமுத்திர ராஜனிடம் சென்றடைய விரும்பினாள். காடும் மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும் தாண்டிக் கொண்டு விரைந்து சென்றாள்.

	மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப, 

	    மணிப்பூ ஆடை அதுபோர்த்துக் 

	கருங்கயற்கண் விழித்து ஒல்கி 

	    நடந்தாய் வாழி! காவேரி ! 

	

	கருங்கயற்கண் விழித்து ஒல்கி 

	    நடந்த எல்லாம் நின்கணவன் 

	திருந்து செங்கோல் வளையாமை 

	    அறிந்தேன் வாழி காவேரி !

	

	பூவர் சோலை மயிலாடப் 

	    புரிந்து குயில்கள் இசைபாடக் 

	காமர் மாலை அருகசைய 

	    நடந்தாய் வாழி காவேரி ! 

	

	காமர் மாலை அருகசைய 

	     நடந்த வெல்லாம், நின் கணவன் 

	நாம வேலின் திறங்கண்டே 

	     அறிந்தேன் வாழி! காவேரி! 
சமுத்திர ராஜனை நெருங்க நெருங்க, நாயகனைக் காணப் போகிறோம் என்ற    குதூகலத்தினால் அவள் உள்ளம் விம்மி உடல் பூரித்தது.  இன்னும் சற்றுத் தூரம்  சென்றாள், காதலனை அணைத்துக்   கொள்ளக் கரங்கள் இரண்டு உண்டாயின.  இரு  கரங்களை விரித்தவாறு தாவிப் பாய்ந்து சென்றாள்.  ஆனால்   உள்ளத்தில்  பொங்கிய ஆர்வ மிகுதிக்கு இரு கரங்கள் போதுமென்று தோன்றவில்லை; அவளுடைய  ஆசைக் கரங்கள்   பத்து, இருபது, நூறு என்று வளர்ந்தன.  அவ்வளவு கரங்களையும்  ஆவலுடன் நீட்டிக் கொண்டு சமுத்திர ராஜனை   அணுகினாள்.  இவ்விதம் ஆசைக்  கணவனை அடைவதற்குச் சென்ற மணப் பெண்ணுக்குச் சோழ நாட்டுச் செவிலித் தாய்மார்    செய்த அலங்காரங்கள்தான் என்ன? அடடா! எத்தனை அழகிய பச்சைப் புடைவைகளை  உடுத்தினார்கள்?  எப்படியெல்லாம் வண்ண மலர்களைச் சூட்டினார்கள்?  எவ்விதமெல்லாம் பரிமள சுகந்தங்களைத் தூவினார்கள்? ஆஹா! இரு   கரையிலும்  வளர்ந்திருந்த புன்னை மரங்களும் கடம்ப மரங்களும் ரத்தினப் பூக்களையும்  வாரிச் சொரிந்த அருமையை   எவ்விதம் வர்ணிப்பது? தேவர்கள் பொழியும்  பூமாரியும் இதற்கு இணையாகுமா? 
  வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள்.
 
"வடவாறு பொங்கி வருது 

	வந்து பாருங்கள், பள்ளியரே! 

	வெள்ளாறு விரைந்து வருது 

	வேடிக்கை பாருங்கள், தோழியரே!

	காவேரி புரண்டு வருது காண

	வாருங்கள், பாங்கியரே!" 
 சோழ மன்னர்களின் தலைநகர்! பூம்புகாரையும் உறையூரையும் சிறிய குக்கிராமங்களாகச் செய்துவிட்ட " தஞ்சாவூர்"
அந்நகரிலுள்ள மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் படை வீடுகளும் கடைவீதிகளும் சிவாலயக் கற்றளிகளும் திருமாலுக்குரிய விண்ணகரங்களும் எப்படியிருக்கும்? அந்த ஆலயங்களில் இசை வல்லவர்கள் இனிய குரலில் தேவாரப் பாடல்களையும் திருவாய்மொழிப் பாசுரங்களையும் பாடக்கேட்டோர் பரவசமடைவார்கள்

                               
                                 மாடமாளிகைகள்

                                  வீடுகள்
                               கடைவீதி
 இன்றைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் விஜயாலய சோழர் முத்தரையர்களை முறியடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். திருப்புறம்பியம் போரில் பல்லவ சைன்யத்துக்குத் துணையாக நின்று மதுரைப் பாண்டியரின் படையை நிர்மூலமாக்கினார். அதுமுதலாவது சோழ ராஜ்யம் நாளுக்கு நாள் பெருகி விஸ்தரித்து வந்திருக்கிறது. காவேரி நதிக்குக் கரையெடுத்த கரிகால் வளவர் காலத்திலேகூடச் சோழ ராஜ்யம் இவ்வளவு மகோன்னதத்தை அடைந்தது கிடையாது. இன்றைக்குத் தெற்கே குமரி முனையிலிருந்து வடக்கே துங்கபத்திரை - கிருஷ்ணை வரையில் சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கிடக்கிறது. பாண்டிய நாடு, நாஞ்சில் நாடு, யாருக்கும் இதுவரையில் வணங்காத சேர நாடு, தொண்டை மண்டலம், பாகி நாடு, கங்கபாடி, நுளம்பபாடி, வைதும்பர் நாடு, சீட்புலி நாடு, பெரும்பாணப்பாடி, பொன்னி நதி உற்பத்தியாகும் குடகு நாடு ஆகிய இத்தனை நாடுகளும் சோழ சாம்ராஜ்யத்துக்கு அடங்கிக் கப்பம் செலுத்தி வருகின்றன. இவ்வளவு நாடுகளிலும் நம் சோழ நாட்டுப் புலிக்கொடி பறக்கிறது.

 பெருவுடையார் கோயில்