Showing posts with label Puttu. Show all posts
Showing posts with label Puttu. Show all posts

Sunday 18 October 2020

மஹாலக்ஷ்மி அஷ்டகம்

 மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம் |

 Mahalakshmi Ashtakam lyrics



#மஹாலக்ஷ்மி_அஷ்டகம்

#அஷ்டகம்_என்றால்

எட்டுப் பொருள்களைக் கொண்டது என்பது பொருள். ஈரடிகளாக வரும் இந்த ஸ்லோகம் இந்திரனால் மஹாலக்ஷ்மியை துதித்து “பத்ம புராணத்தில்” பாடப்பட்டது.

இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை ஒரு முறை, இரு முறை, மூன்று முறைகளால் சொல்வதால் ஏற்படும் பலன்களைக் குறிப்பது.

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜித
ஷங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமஸ்துதே

படைப்பின் மூல காரணங்களாக விளங்குபவளும், ஸ்ரீபீடத்தில் வைத்து ஸூரர்களால் வணங்கப்படுபவளும், அழகிய கரத்தில் சங்கையும், சக்கரம், கதை வைத்திருப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், கோலாஸூரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவளும், நம் சகல பாவங்களையும் நீக்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

ஸர்வக்நே சர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வதுக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

அனைத்தையும் அறிந்தவளும், அணைத்து வரங்களைக் கொடுப்பவளும், துஷ்ட குணங்களை அளிப்பவளும், துக்கங்களை அழிப்பவளும் வணங்குகிறேன்.

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

சாதனைகள் புரிந்து நல்ல முறையில் வாழ புத்தியை அளிப்பவளும், இந்த உலகில் செழிப்புடன் வாழ்ந்து அவளின் பாத கமலங்களை அடைய அருள்பவளும், மந்திரங்களின் சூட்சும ஸ்வரூபமாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்நே யோக ஸ்ம்பூ தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

ஆதியந்தம் இல்லாதவளும், சகல விஷயங்களுக்கு பின்னால் இருப்பவளும், யோகமாக பிறந்தவளும், யோகத்தால் இணைந்தவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

அணைத்து விஷயங்களுக்கும் பின்னால் சூட்சும வடிவத்தில் ஆதார சக்தியாக விளங்குபவளும், பயங்கர வடிவத்தில் ருத்ரணியாக விளங்குபவளும், பெரும் சக்தியின் பிறப்பிடமாக விளங்குபவளும், அனைத்து பாபங்களையும அழிப்பவளும் மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்பிரஹ்ம ஸ்வரூபினி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமஸ்துதே

தாமரை ஆசனத்தில் சாந்தம் தவழும் முகத்துடன் அமர்ந்திருப்பவளும், உயர்ந்த ப்ராமணியாக விளங்குபவளும், இப்பிரஞ்சத்தின் உயர்ந்த கடவுளாக, தாயாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத்ஸ்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமஸ்துதே

தூய்மையின் அம்சமான வெள்ளை உடையை அணிந்திருப்பவளும், பலவித ஆபரணங்கள் அணிந்திருப்பவளும்,
பிரபஞ்சத்தில் தாய்க்கு தாயாக காப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய : படேத் பக்திமான் நர :
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

யார் ஒருவர் இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை பக்தியுடன் சொல்கிறார்களோ அவர்கள் சகலவிதமான சம்பத்துக்களையும் பெற்று அன்னையின் காலடிகளை அடைவார்கள்.

ஏக காலம் படேந் நித்யம் மஹா பாப விநாஷணம்
த்விகாலம் ய : படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:

இந்த ஸ்லோகத்தை ஒரு முறை சொன்னால் அணைத்து பாவங்களும் நீங்கும்.
இரு முறை சொன்னால் தனங்களையும், தான்யங்களையும் அடைவோம்.

த்ரிகாலம் ய படேந்நித்யம் மஹா ஷத்ரு விநாஷனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்ன வரதா ஸூபா

மூன்று முறை சொன்னால் நம்முடைய எதிரிகள் அழிவார்கள்.
தினம் இதை கூறி மஹாலக்ஷ்மியின் பரிபூரண அருள் பொங்கிய சாந்த வடிவத்தில் நாம் சகல அனுக்ரஹங்களையும் பெறுவோம்.