Saturday 27 February 2021

கோமளவல்லி காணும் பொங்கல்










 பிரளயத்தின்போது வேடன் வடிவில்  வந்த ஈசன், அமுத குடத்தின் மூக்கை உடைக்க, அமுதம் கீழே பரவி ஓடியது. அந்த அமுதம் இரண்டு இடங்களில் தேங்கி நின்றது. ஒன்று குடந்தை  மகாமகக் குளம். மற்றோர் இடம் சார்ங்கபாணி ஹேம புஷ்கரணி எனும் பொற்றாமரைக் குளம். மகாமகத்தின்போது இந்த பொற்றாமரைக் குளத்தில்  நீராடுவதும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. இதன் கரையில் தாயாரை வளர்த்த ஹேம மகரிஷிக்கு சந்நதி ஒன்று உள்ளது.தனிக் கோயில்  நாச்சியாராக, தனி சந்நிதானம் கொண்டு கோமளவல்லி நாச்சியார் சேவை சாதிக்கிறார். கோமளவல்லி என்பதற்கு, தமிழில் பொற்கொடி என்று பொருள்.  ஸ்ரீகோமளவல்லி தாயாரின் அவதாரத் தலமானதால் தாயாரை வழிபட்ட பிறகே பெருமாளை தரிசிப்பது இங்குள்ள நடைமுறை.ஸ்ரீகோமளவல்லி தாயாருக்கு ‘படிதாண்டா பத்தினி’ என்ற பெயரும் உண்டு.



இவர் கோயிலை விட்டு வெளியே வர மாட்டார். காணும் பொங்கல் அன்று மட்டும் தாயார் கோயிலின் உட் பிராகாரத்தில் எழுந்தருளி வலம் வந்து  பொற்றாமரைக் குளத்தை அடைந்து அவர் பிறந்த வீட்டில் கனு வைப்பதாக ஐதீகம். அன்று ஊரில் உள்ள கன்னிப் பெண்கள், சிறுமிகள் மற்றும்  சுமங்கலிகள் உட்பட எல்லோரும் பொற்றாமரை குளத்துக்கு வந்து, தாயாருடன் சேர்ந்து கனு வைக்கும் வைபவம் கோலாகலமாக நிகழும்.




17-ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆட்சி செய்த ரகுநாத நாயக்கரின் குருவும், ஆஸ்தான புலவருமான உ.வே. ஐயா குமாரதாதாசார்யர் என்பவர்  சார்ங்கபாணியிடம் பெரும் ஈடுபாடு கொண்டு, திருப்பணிகள் பலவற்றைச்செய்துள்ளார்.தாயாருக்குத் தனிச் சந்நதி அமைக்க வேண்டுமென விரும்பி,  அதற்காக நாயக்க மன்னரின் உதவியுடன் ஸ்ரீஆராவ முதனின் தெற்குப் பிராகாரத்தில் சந்நதி அமைத்ததும் தாதாச்சார்யரே. அதற்காக தாயார்  சந்நதியின் எதிரே அன்னையை தரிசிப்பதுபோல் தாதாச்சார்யரின் திருவுருவத்தை அமைத்துள்ளனர். இவரின் சீடரே ஸ்ரீலட்சுமி நாராயணசுவாமி.

தைத் திருவிழாவின்போது திருமண நாள் நினைவாக கோமளவல்லித் தாயாருக்கு இங்கு மாலை மாற்று விழா சிறப்புடன் நடக்கிறது.இங்குள்ள உற்சவ மூர்த்தி மிக அழகு! இவர் சங்கு, சக்கரம், கதாயுதம், வில் (சார்ங்கம்), உடைவாள் ஆகிய ஆயுதங்களுடன் வலது திருக் கை அபய  ஹஸ்தத்துடன் ஐம்பொன் சிலையாகஎழுந்தருளியிருக்கிறார். தமிழ்நாட்டில், திருவாரூர் தேர் அளவில்முதலாவதாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்  இரண்டாவதாகவும், திருக்குடந்தைத் தேர் மூன்றாவதாகவும் இடம்பெற்றுள்ளன.ஏழாம் நூற்றாண்டில் சார்ங்கபாணி பெருமாளுக்கு சித்திரைத் திருத்தேர்  என்ற மாபெரும் தேரைச் செய்து வைத்து ‘திருவெழு கூற்றிருக்கை’ என்ற பிரபந்தத்தைப் பாடி அருளினார் திருமங்கையாழ்வார் என்பது வரலாறு.இங்கு சித்திரைப் பெருவிழாவில் தேரோட்டம் நடைபெறும். மாசியில் பொற்றாமரைக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். வைகுந்த ஏகாதசி  அரையர் சேவை சிறப்புடையது.




ஹேம ரிஷியின் நினைவாக இங்குள்ள பொற்றாமரைக் குளம் ஹேம புஷ்கரணி எனப்படுகிறது. சுமார் 360 அடி நீளம், 285 அடி அகலம் கொண்ட  இந்தக் குளக் கரையில் ஹேம முனிவருக்கு சிறிய சந்நதி ஒன்று இருக்கிறது. இதை விட ஆதியில் பெரிதாக இருந்ததாம் இந்தத் தீர்த்தம். இப்போது  சுருங்கி விட்டதாம். இதற்கு லட்சுமி தீர்த்தம், அமுதவாணி என்ற பெயர்களும் உள்ளன.முதலில் ஹேம ரிஷி சந்நதியில் வணங்கி, குளக்கரையில்  உள்ள மற்ற தெய்வங்களையும் தரிசித்து விட்டு, வடக்கே உள்ள தல விருட்சமான பாரிஜாதத்தைத் தொழுது, கடைசியாக பெருமாளையும் சேவித்த  பிறகு இதில் நீராட வேண்டும் என்பது நியதி.மாசி மகம், இங்குள்ள எல்லா சிவ-விஷ்ணு கோயில்களிலும் பெரிய உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.  12 வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகாமகம் கும்பகோணத்தின் மற்றொரு சிறப்பு.

சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் அட்சயத் திருதியை அன்று, கும்பகோணம் டி.எஸ்.ஆர். பெரிய தெருவில் 12 கருட சேவை விழா  கொண்டாடப்படுகிறது. கும்பகோணம் மற்றும் அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள விஷ்ணு ஆலயங்களிலிருந்து பகவான் கருட வாகனத்தில் எழுந்தருளி  நாள் முழுக்க தரிசனம் தருவார். அப்போது இங்கு ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீராமபிரானோடு ஸ்ரீசார்ங்கபாணி நடுநாயகமாக எழுந்தருள்கிறார்.வேறெங்கும் இந்த நடைமுறை வழக்கத்தில் இல்லை.இங்கு தை மாதத்தில் நடைபெறும் மட்டையடி உற்சவம் புகழ் பெற்றது. சார்ங்கபாணியர், ஓர்  இரவு தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் கோயிலில் இருந்து வெளியேறியதால் கோபமுற்ற தாயார் அவரை மீண்டும் கோயிலுக்குள் நுழைய  விடாமல் கதவை அடைத்து விட்டார். நம்மாழ்வார் தலையிட்டு இவர்களுக்கு இடையிலான ஊடலைத் தீர்த்து வைத்த நிகழ்ச்சியே இந்த மட்டையடி  உற்சவம்.

எந்தப் பாவமும் காசிக்குச் சென்றால் தொலையும்; காசியில் செய்த பாவம் திருக்குடந்தையில் அழியும். திருக்குடந்தையில் செய்த பாவம் வேறெங்கும்  தீராது; இங்கேயே தீர்க்க வேண்டும் என்பது ஐதீகம்.சார்ங்கபாணி பெருமாளை ஒரு முறை சேவித்தாலே பிரம்மஹத்தி போன்ற தோஷங்கள்அகலும்.சார்ங்கபாணி கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசித்து, பிரசாதம் பெற்றுக் கொண்டால், பயணத் தின்போது, இக்கட்டில் சிக்கிக்  கொள்ளாததுடன், பயம் மற்றும் மரண பயத்தில் இருந்தும் மீளலாம். பெருமாளின் பிரசாதம் சக்கரம் போல் பக்தர்களை பாதுகாக்கும் என்பது நம்பிக்கை.

ஒரு முறை இந்தத் திருக்கோயிலுக்கு ஆபத்து வந்தபோது மொத்தக் கோயிலையும் வைக்கோலுக்குள் திரையிட்டு மறைத்து வைத்துக் காப்பாற்றினார்  மெய்க்காவலிடையர் என்ற அடியார். தேரோட்டம் முடிந்து தீர்த்தவாரியானதும், சுவாமியும் தாயாரும் மெய்க்காவலிடையருக்கு தீர்த்த மரியாதை  அளித்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.இதன் நினைவாக இன்றும் கும்பகோணத்து அருளிச் செயல் கோஷ்டியில், திருக்கோஷ்டியூர் பாசுரம் ஒன்று  ஓதப்படுகிறது.ஸ்ரீரங்கம்- அரவணை பிரசாதம் போன்று சார்ங்கபாணி பெருமாளுக்கு ‘கும்மாயம்’ படைக்கப்படுகிறது. பாசிப் பருப்பு, வெல்லம் மற்றும் பசு  நெய் சேர்த்து தயார் செய்யப்படுவதே இந்தக் கும்மாயம். இதை தினமும் புதிய மண் கலத்தில் சமைக்கிறார்கள்.

கும்மாயம்


பாசிப்பருப்பு     -அரை கிலோ
வெல்லம்         - முக்கால் கிலோ
முந்திரிப்பருப்பு     -100 கிராம்
பசு நெய்         - 400 கிராம்
ஏலக்காய் தூள்     -2 ஸ்பூன்

செய்முறை: பாசிப்பருப்பை நன்கு வாசனை வரும் வரை வறுத்து குழைய வேகவைத்து மசித்துக் கொள்கிறார்கள். வெல்லத்தைப்பொடித்து கரைத்துக்  கொதிக்க வைத்து தூசி அழுக்கை நீக்கி மீண்டும் கொதிக்க வைத்து கெட்டிப்பாகு பதத்தில் வேகவைத்து மசித்த பயற்றம்பருப்புக் கலவையில் கொட்டி  நன்கு கலந்து கெட்டிப்பட்டதும் பசு நெய்யில் முந்திரி, ஏலக்காய் பொடியைத்தூவி கலந்து  நிவேதிக்கின்றனர். மண மணக்கும் கும்மாயம் பிரசாதம்  தயார்.

திருவெழு கூற்றிருக்கை திருமங்கையாழ்வார்

திருவெழுக்கூற்றிருக்கை என்பது ரதபந்தனக் கவி எனப் படும் ஒன்று.
எண் வரிசை( பொருளால்) ஒரு தேர் போல தோன்றும் அமைப்பு கொண்ட செய்யுள் தான் திருஎழுகூற்றிக்கை.

எழுகூற்றிருக்கைச் செய்யுள்களைத் தேர் அமைப்பில் பொருத்திப் பார்க்கையில், அவற்றில் உள்ள சொற்கள் தேர்த்தட்டின் மேலும் கீழுமுள்ள பகுதிகளை முக்கோண வடிவில் நிரப்புவனவாக இருப்பதைக் காணலாம்.

எழுகூற்றிருக்கையின் இந்த அமைப்பில் உள்ள கணித நுண்மையைக் கீழுள்ள படம் விளக்கும்:

1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321

1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலும் கீழேயும் செல்வதுமாக அமைந்த அற்புதமான பாட்டு.

1
1 2 1
1 2 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1

இடையில் தேர் தட்டு … … … … … … .

1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 2 1
1 2 1
1

பாடலின் வரிகளில் 1,2,3,4,5,6,7 எண்களைக் குறிக்கும் சொற்களை மேலே குறிப்பிட்டுள்ள வரிசைப்படி எழுதி மொத்தத்தில் அது ஒரு கருத்தைக் குறிக்கும் என்றால் அது தான் எழு கூற்றிருக்கை என்பதாகும்.

திரு என்ற சிறப்பு அடைமொழி கொண்ட திருவெழுகூற்றிருக்கை என்பது இறைவனின் அருட்செயல்களையும் சில தத்துவங்களையும் உள்ளடக்கிய பாடலைக் குறிக்கும்.

யாரெல்லாம் திருஎழுகூற்றிக்கை எழுதி இருக்கிறார்கள்?
1.

திருமங்கையாழ்வார்

2.நக்கீரர்
3.அருணகிரிநாதர்
4.

திருஞானசம்பந்தர்







ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில், ஒருமுறை அயனை யீன்றனை,

ஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள் இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை,

மூவடி நானிலம் வேண்டி, முப்புரி _லொடு மானுரி யிலங்கும். மார்வினில், இருபிறப் பொருமா ணாகி, ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை,

நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி , அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை,

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில் ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர் அறியும் தன்மையை,

முக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறுபெ ¡தி சடையோன் அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,

ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து மங்கையர் இருவரும் மலரன, அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,

நெறிமுறை நால்வகை வருணமும் ஆயி னை, மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே, அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால் ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை,

குன்றா மதுமலர்ச் சோலை வண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித் திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக் கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென் திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடர வமளியில் அறிதுயில் அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே.

Wednesday 24 February 2021

பெரிய திருமொழி - திருமங்கையாழ்வார்

 



(1248)

போதலர்ந்த பொழில்சோலைப் புறமெங்கும் பொருதிரைகள்

தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென்கரைமேல்

மாதவன்றா னுறையுமிடம் வயல்நாங்கை வரிவண்டு

தேதெனவென் றிசைபாடும் திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1249)

யாவருமா யாவையுமா யெழில்வேதப் பொருள்களுமாய்

மூவருமாய் முதலாய மூர்த்தியமர்ந் துறையுமிடம்,

மாவரும்திண் படைமன்னை வென்றிகொள்வார் மன்னுநாங்கை

தேவரும்சென் றிறைஞ்சுபொழில் திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1250)

வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்

தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம்,

ஆனாத பெருஞ்செல்வத் தருமறையோர் நாங்கைதன்னுள்

தேனாரு மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1251)

இந்திரனு மிமையவரும் முனிவர்களும் எழிலமைந்த

சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்,

எந்தையெமக் கருள், எனநின் றருளுமிடம் எழில்நாங்கை

சுந்தரநல் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1252)

அண்டமுமிவ் வலைகடலு மவனிகளும் குலவரையும்

உண்டபிரா னுறையுமிடம் ஓளிமணிசந் தகில்கனகம்,

தெண்டிரைகள் வரத்திரட்டும் திகழ்மண்ணித் தென்கரைமேல்,

திண்திறலார் பயில்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1253)

ஞாலமெல்லா மமுதுசெய்து நான்மறையும் தொடராத

பாலகனா யாலிலையில் பள்ளிகொள்ளும் பரமனிடம்,

சாலிவளம் பெருகிவரும் தடமண்ணித் தென்கரைமேல்

சேலுகளும் வயல்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1254)

ஓடாத வாளரியி னுருவாகி யிரணியனை

வாடாத வள்ளுகிரால் பிளந்தளைந்த மாலதிடம்,

ஏடேறு பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,

சேடேறு பொழில்தழுவு திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1255)

வாராரு மிளங்கொங்கை மைதிலியை மணம்புணர்வான்,

காரார்திண் சிலையிறுத்த தனிக்காளை கருதுமிடம்

ஏராரும் பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,

சீராரும் மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1256)

கும்பமிகு மதயானை பாகனொடும் குலைந்துவீழ

கொம்பதனைப் பறித்தெறிந்த கூத்தனமர்ந் துறையுமிடம்,

வம்பவிழும் செண்பகத்தின் மணங்கமழும் நாங்கைதன்னுள்,

செம்பொன்மதிள் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1257)

காரார்ந்த திருமேனிக் கண்ணனமர்ந் துறையுமிடம்,

சீரார்ந்த பொழில்நாங்கைத் திருத்தேவ னார்தொகைமேல்

கூரார்ந்த வேற்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார்

ஏரார்ந்த வைகுந்தத் திமையவரோ டிருப்பாரே


(1258)

கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன் கதிர்முடி யவைபத்தும்

அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு அளித்தவ னுறைகோயில்

செம்ப லாநிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள்சூழ்

வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1259)

பல்ல வந்திகழ் பூங்கடம் பேறியக் காளியன் பணவரங்கில்,

ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த உம்பர்க்கோ னுறைகோயில்,

நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை வேள்வியோ டாறங்கம்,

வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1260)

அண்ட ரானவர் வானவர் கோனுக்கென் றமைத்தசோ றதுவெல்லாம்

உண்டு கோநிரை மேய்த்தவை காத்தவன் உகந்தினி துறைகோயில்,

கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில் குலமயில் நடமாட,

வண்டு தானிசை பாடிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1261)

பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன் பாகனைச் சாடிப்புக்கு,

ஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை உதைத்தவ னுறைகோயில்,

கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு கழனியில் மலிவாவி

மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1262)

சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன் படையொடுங் கிளையோடும்

ஓட வாணனை யாயிரந் தோள்களும் துணித்தவ னுறைகோயில்,

ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப் பகலவ னொளிமறைக்கும்

மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1263)

அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன் அலர்கொடு தொழுதேத்த,

கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய கண்ணன்வந் துறைகோயில்,

கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள் காட்டமா பதுமங்கள்,

மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1264)

உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன துரம்பிளந் துதிரத்தை

அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய அப்பன்வந் துறைகோயில்,

இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ டெழில்கொள்பந் தடிப்போர்கை

வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1265)

வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன் சாபமற் றதுநீங்க

மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம் முகில்வண்ண னுறைகோயில்

பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன் பழம்விழ வெருவிப்போய்

வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1266)

இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் முகனைத்தன் னெழிலாரும்

உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன் உகந்தினி துறைகோயில்,

குந்தி வாழையின் கொழுங்கனி கர்ந்துதன் குருளையைத் தழுவிப்போய்,

மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1267)

மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர் வண்புரு டோத்தமத்துள்,

அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன் ஆலிமன் அருள்மாரி,

பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப் பத்தும்வல் லார்,உலகில்

எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ ரோடும் கூடுவரே.

(1258)

கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன் கதிர்முடி யவைபத்தும்

அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு அளித்தவ னுறைகோயில்

செம்ப லாநிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள்சூழ்

வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1259)

பல்ல வந்திகழ் பூங்கடம் பேறியக் காளியன் பணவரங்கில்,

ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த உம்பர்க்கோ னுறைகோயில்,

நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை வேள்வியோ டாறங்கம்,

வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1260)

அண்ட ரானவர் வானவர் கோனுக்கென் றமைத்தசோ றதுவெல்லாம்

உண்டு கோநிரை மேய்த்தவை காத்தவன் உகந்தினி துறைகோயில்,

கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில் குலமயில் நடமாட,

வண்டு தானிசை பாடிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1261)

பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன் பாகனைச் சாடிப்புக்கு,

ஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை உதைத்தவ னுறைகோயில்,

கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு கழனியில் மலிவாவி

மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1262)

சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன் படையொடுங் கிளையோடும்

ஓட வாணனை யாயிரந் தோள்களும் துணித்தவ னுறைகோயில்,

ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப் பகலவ னொளிமறைக்கும்

மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1263)

அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன் அலர்கொடு தொழுதேத்த,

கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய கண்ணன்வந் துறைகோயில்,

கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள் காட்டமா பதுமங்கள்,

மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1264)

உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன துரம்பிளந் துதிரத்தை

அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய அப்பன்வந் துறைகோயில்,

இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ டெழில்கொள்பந் தடிப்போர்கை

வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1265)

வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன் சாபமற் றதுநீங்க

மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம் முகில்வண்ண னுறைகோயில்

பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன் பழம்விழ வெருவிப்போய்

வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1266)

இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் முகனைத்தன் னெழிலாரும்

உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன் உகந்தினி துறைகோயில்,

குந்தி வாழையின் கொழுங்கனி கர்ந்துதன் குருளையைத் தழுவிப்போய்,

மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1267)

மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர் வண்புரு டோத்தமத்துள்,

அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன் ஆலிமன் அருள்மாரி,

பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப் பத்தும்வல் லார்,உலகில்

எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ ரோடும் கூடுவரே.


(1268)

பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும் பேரரு ளாளனெம் பிரானை,

வாரணி முலையாள் மலர்மக ளோடு மண்மக ளுமுடன் நிற்ப,

சீரணி மாட நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

காரணி மேகம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.

விளக்க உரை

(1269)

பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னைப் பேதியா வின்பவெள் ளத்தை,

இறப்பெதிர் காலக் கழிவுமா னானை ஏழிசை யின்சுவை தன்னை,

சிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டுநான் வாழ்ந்தொழிந் தேனே.

விளக்க உரை

(1270)

திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும் செழுநிலத் துயிர்களும் மற்றும்,

படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை, பங்கயத் தயனவ னனைய, திடமொழி

மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.

விளக்க உரை

(1271)

வசையறு குறளாய் மாவலி வேள்வி மண்ணள விட்டவன் றன்னை,

அசைவறு மமர ரடியிணை வணங்க அலைகடல் துயின்றவம் மானை,

திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

உயர்மணி மகுடம் சூடிநின் றானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.

விளக்க உரை

(1272)

தீமனத் தரக்கர் திறலழித் தவனே என்றுசென் றடைந்தவர் தமக்கு,

தாய்மனத் திரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே,

தேமலர்ப் பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

காமனைப் பயந்தான் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே

விளக்க உரை

(1273)

மல்லைமா முந்நீ ரதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை,

கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை கலங்கவோர் வாளிதொட் டானை,

செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

அல்லிமா மலராள் தன்னொடு மடியேன் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே.

விளக்க உரை

(1274)

வெஞ்சினக் களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டிறுத் தடர்த்தவன் றன்னை,

கஞ்சனைக் காய்ந்த காளையம் மானைக் கருமுகில் திருநிறத் தவனை,

செஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

அஞ்சனக் குன்றம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே.

விளக்க உரை

(1275)

அன்றிய வாண னாயிரம் தோளும் துணியவன் றாழிதொட் டானை,

மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல் மேவிய வேதநல் விளக்கை,

தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந்தேனே.

விளக்க உரை

(1276)

களங்கனி வண்ணா. கண்ணணே என்றன் கார்முகி லேஎன நினைந்திட்டு,

உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள் உள்ளத்து ளூறிய தேனை,

தெளிந்தநான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே.

விளக்க உரை

(1277)

தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாட்கலி கன்றி,

ஊனமில் பாட லொன்பதோ டொன்றும் ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள்,

மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு வானவ ராகுவர் மகிழ்ந்தே.


(1278)

மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார்குழையும், தந்தை

கால்தளையு முடன்கழல வந்து தோன்றிக் கதநாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்,

நூற்றிதழ்கொ ளரவிந்தம் நுழைந்த பள்ளத் திளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின்,

சேற்றளையில் வெண்முத்தம் சிந்து நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

விளக்க உரை

(1279)

பொற்றொடித்தோள் மடமகள்தன் வடிவுகொண்டபொல்லாத வன்பேய்ச்சி கொங்கை வாங்கி,

பெற்றெடுத்த தாய்போல மடுப்ப ஆரும்பேணாநஞ் சுண்டுகந்த பிள்ளை கண்டீர்,

நெல்தொடுத்த மலர்நீலம் நிறைந்த சூழல் இருஞ்சிறைய வண்டொலியும் நெடுங்க ணார்தம்,

சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

விளக்க உரை

(1280)

படலடைந்த சிறுகுரம்பை நுழைந்து புக்குப்பசுவெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்,

அடலடர்த்த வேற்கண்ணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்துழலு மையன் கண்டீர்,

மடலெடுத்த நெடுன்தெங்கின் பழங்கல் வீழ மாங்கனிகள் திரட்டுருட்டா வருநீர்ப் பொன்னி,

திடலெடுத்து மலர்சுமந்தங் கிழியு நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே

விளக்க உரை

(1281)

வாராரும் முலைமடவாள் பின்னைக் காகி வளைமருப்பிற் கடுஞ்சினத்து வன்தா ளார்ந்த,

காரார்திண் விடையடர்த்து வதுவை யாண்ட கருமுகில்போல் திருநிறத்தென் கண்ணர் கண்டீர்,

ஏராரும் மலர்ப்பொழில்கள் தழுவி யெங்கும் எழில்மதியைக் கால்தொடா விளங்கு சோதி,

சீராரு மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

விளக்க உரை

(1282)

கலையிலங்கு மகலல்குல் கமலப் பாவை கதிர்முத்த வெண்ணகையாள் கருங்க ணாய்ச்சி,

முலையிலங்கு மொளிமணிப்பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரைநெடுந்தோள் மூர்த்தி கண்டீர்,

மலையிலங்கு நிரைச்சந்தி மாட வீதி ஆடவரை மடமொழியார் முகத்து இரண்டு

சிலைவிலங்கி மனஞ்சிறைகொண் டிருக்கும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

விளக்க உரை

(1283)

தான்போலு மென்றெழுந்தான் தரணி யாளன் அதுகண்டு தரித்திருப்பா னரக்கர் தங்கள்,

கோன்போலு மென்றெழுந்தான் குன்ற மன்ன இருபதுதோ ளுடன்துணித்த வொருவன் கண்டீர்,

மான்போலு மென்னோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு,

தேன்போலு மென்மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

விளக்க உரை

(1284)

பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப் பொல்லாத குறளுருவாய்ப் பொருந்தா வாணன்

மங்கலம்சேர் மறைவேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறையிரந்த மைந்தன் கண்டீர்,

கொங்கலர்ந்த மலர்க்குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பளைந்த கோலந் தன்னால்,

செங்கலங்கல் வெண்மணல்மேல் தவழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே

விளக்க உரை

(1285)

சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்பத் திருவா காரம்

குலுங்க, நிலமடந்தை தனையிடந்து புல்கிக் கோட்டிடைவைத் தருளியவெங் கோமான் கண்டீர்,

இலங்கியநான் மறையனைத்து மங்க மாறும் ஏழிசையும் கேள்விகளு மெண்டிக் கெங்கும்,

சிலம்பியநற் பெருஞ்செல்வம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

விளக்க உரை

(1286)

ஏழுலகும் தாழ்வரையு மெங்கு மூடி எண்டிசையு மண்டலமும் மண்டி, அண்டம்

மோழையெழுந் தாழிமிகும் ஊழி வெள்ளம் முன்னகட்டி லொடுக்கியவெம் மூர்த்தி கண்டீர்,

ஊழிதொறு மூழிதொறு முயர்ந்த செல்வத் தோங்கியநான் மறையனைத்தும் தாங்கு நாவர்,

சேழுயர்ந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

விளக்க உரை

(1287)

சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலை,

கூரணிந்த வேல்வலவன் ஆலி நாடன் கொடிமாட மங்கையர்கோன் குறைய லாளி

பாரணிந்த தொல்புகழான் கலியன் சொன்ன பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார்,

சீரணிந்த வுலகத்து மன்ன ராகிச் சேண்விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே.


(1288)

தூம்புடைப் பனைக்கை வேழம் துயர்கெடுத் தருளி, மன்னு

காம்புடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை,

பூம்புனல் பொன்னி முற்றும் புகுந்துபொன் வரண்ட, எங்கும்

தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

விளக்க உரை

(1289)

கவ்வைவா ளெயிற்று வன்பேய்க் கதிர்முலை சுவைத்து,இலங்கை

வவ்விய இடும்பை தீரக் கடுங்கணை துரந்த எந்தை,

கொவ்வைவாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த,

தெய்வநீர் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

விளக்க உரை

(1290)

மாத்தொழில் மடங்கக் செற்று மறுதிற நடந்து வன்தாள்

சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்த எந்தை,

நாத்தொழில் மறைவல் லார்கள் நயந்தறம் பயந்த வண்கைத்

தீத்தொழில் பயிலும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

விளக்க உரை

(1291)

தாங்கருஞ் சினத்து வன்தாள் தடக்கைமா மருப்பு வாங்கி,

பூங்குருந் தொசித்துப் புள்வாய் பிளந்தெரு தடர்த்த எந்தை,

மாங்கனி நுகர்ந்த மந்தி வந்துவண் டிரிய வாழைத்

தீங்கனி நுகரும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

விளக்க உரை

(1292)

கருமக ளிலங்கை யாட்டி பிலங்கொள்வாய் திறந்து தன்மேல்

வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை,

பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவி லாத,

திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

விளக்க உரை

(1293)

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலு மரியும் மாவும்,

அண்டமும் சுடரும் அல்ல ஆற்றலு மாய எந்தை,

ஓண்டிறல் தென்ன னோட வடவர சோட்டங் கண்ட,

திண்டிற லாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே.

விளக்க உரை

(1294)

குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு,

நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை,

மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு, எங்கும்

தென்றல்வந் துலவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

விளக்க உரை

(1295)

சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத் தரணி யோம்பும்,

பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களு மாய வெந்தை,

பங்கய முகுத்த தேறல் பருகிய வாளை பாய,

செங்கய லுகளும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

விளக்க உரை

(1296)

பாவமும் அறமும் வீடும் இன்பமுந் துன்பந் தானும்

கோவமும் அருளும் அல்லாக் குணங்களு மாய எந்தை,

மூவரி லெங்கள் மூர்த்தி இவன்,என முனிவரோடு,

தேவர்வந் திறைஞ்சும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே.

விளக்க உரை

(1297)

திங்கள்தோய் மாட நாங்கூர்த் திருமணிக் கூடத் தானை

மங்கையர் தலைவன் வண்தார்க் கலியன்வா யொலிகள் வல்லார்,

பொங்குநீ ருலக மாண்டு பொன்னுல காண்டு, பின்னும்

வெங்கதிர்ப் பரிதி வட்டத் தூடுபோய் விளங்கு வாரே.


(1298)

தாவளந் துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு,

நாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின் நடுக்கந் தீர்த்தாய்,

மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக்,

காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே.

விளக்க உரை

(1299)

மண்ணிடந் தேன மாகி மாவலி வலிதொ லைப்பான்,

விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையி ரந்தாய்

துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய,

கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1300)

உருத்தெழு வாலி மார்வில் ஓருகணை யுருவ வோட்டி,

கருத்துடைத் தம்பிக் கின்பக் கதிமுடி யரச ளித்தாய்,

பருத்தெழு பலவும் மாவும் பழம்விழுந் தொழுகும் நாங்கைக்

கருத்தனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1301)

முனைமகத் தரக்கன் மாள முடிகள்பத் தறுத்து வீழ்த்து,ஆங்

கனையவற் கிளைய வற்கே அரசளித் தருளி னானே,

சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் நாங்கைக்,

கனைகழல் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1302)

படவர வுச்சி தன்மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து,

மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தி னானே,

தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய,

கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1303)

மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று,

பல்லர சவிந்து வீழப் பாரதப் போர்மு டித்தாய்,

நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய,

கல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1304)

மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழுந் தருளி,

மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய்,

பூத்தமர் சோலை யோங்கிப் புனல்பரந் தொழுகும், நாங்கைக்

காத்தவனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1305)

ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று,

காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்,

பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்,

காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே.

விளக்க உரை

(1306)

சந்தமாய் சமய மாகிச் சமயவைம் பூத மாகி,

அந்தமா யாதி யாகி அருமறை யவையு மானாய்,

மந்தமார் பொழில்க டோறும் மடமயி லாலும் நாங்கை,

கந்தமார் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1307)

மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக்

காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன,

பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி,

கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே.


(1308)

கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்,

நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர்,

திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்

அண்ணா,அடியே னிடரைக் களையாயே.

விளக்க உரை

(1309)

கொந்தார் துளவமலர் கொன்ட ணிவானே,

நந்தாத பெரும்புகழ் வேதியர் நாங்கூர்,

செந்தா மரைநீர்த் திருவெள்ளக் குளத்துள்

எந்தாய்,அடியே னிடரைக் களையாயே.

விளக்க உரை

(1310)

குன்றால் குளிர்மா ரிதடுத் துகந்தானே,

நன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர்

சென்றார் வணங்கும் திருவெள்ளக் குளத்துள்

நின்றாய், நெடியாய் அடியே னிடர்நீக்கே.

விளக்க உரை

(1311)

கானார் கரிகொம் பதொசித்த களிறே,

நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர்,

தேனார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்

ஆனாய், அடியேனுக் கருள்புரி யாயே.

விளக்க உரை

(1312)

வேடார் திருவேங் கடம்மேய விளக்கே,

நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்,

சேடார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்தாய்,

பாடா வருவேன் விணையா யினபாற்றே.

விளக்க உரை

(1313)

கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய்,

நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச்

செல்வா, திருவெள்ளக் குளத்துறை வானே,

எல்லா இடரும் கெடுமா றருளாயே’

விளக்க உரை

(1314)

கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே,

நாலா கியவே தியர்மன் னியநாங்கூர்,

சேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள்

மாலே, எனவல் வினைதீர்த் தருளாயே.

விளக்க உரை

(1315)

வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய்,

நாரா யணனே நல்லவே தியர்நாங்கூர்,

சீரார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்

ஆரா வமுதேஅடியேற் கருளாயே’

விளக்க உரை

(1316)

பூவார் திருமா மகள்புல் லியமார்பா,

நாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்த்

தேவா திருவெள்ளக் குளத்துறை வானே,

ஆவா அடியா னிவன்,என் றருளாயே.

விளக்க உரை

(1317)

நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர்ச்

செல்வன் திருவெள் ளக்குளத் துறைவானை,

கல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை,

வல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே.









Sunday 7 February 2021

சார்வரி வருடம் தை அமாவாசை திருநாங்கூரில் 11 கருட சேவை வைபவம் 12-FEB-2021




 


 நாகை மாவட்டம், சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூரில் தை அமாவாசை (12-FEB-2021) கருட சேவை உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளன.


வைணவ சம்பிரதாயத்தில் 'பெரிய திருவடி' என்று பக்தர்களால் அழைக்கப்படும் கருடாழ்வார் மீது இறைவன் எழுந்தருளும் திருக்கோலமே `கருட சேவை' எனப்படும். கருட சேவையை தரிசித்தால் பல புண்ணிய பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை. 


திருநாங்கூரைச் சுற்றி 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. இந்தத் திருத்தலத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசையைத் தொடர்ந்து கருட சேவை வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்துக்கான கருட சேவை (12-FEB-2021) உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளன.. ஒரே நாளில் 11 திவ்ய தேசத்துப் பெருமாள்களும் எழுந்தருளி சேவை சாதிப்பதே இதன் சிறப்பாகும். 

12-FEB-2021 மதியம் 1.30 மணியளவில், திருநாங்கூரைச் சுற்றியுள்ள 11 திருக்கோயில்களிலிருந்து 11 பெருமாள் உற்சவமூர்த்திகள் திருநாங்கூரில் எழுந்தருளினர். ஸ்ரீநாராயண பெருமாள் (மணிமாடக் கோயில்),  ஸ்ரீகுடமாடு கூத்தர் (அரியமேய விண்ணகரம்), ஸ்ரீசெம்பொன்னரங்கர் (செம்பொன்செய் கோயில்), ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள் (திருத்தெற்றியம்பலம்), ஸ்ரீஅண்ணன் பெருமாள் (திருவெள்ளக்குளம்), ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாள் (வண் புருஷோத்தமம்), ஸ்ரீவரதராஜன் (திருமணிக்கூடம்), ஸ்ரீவைகுந்த பெருமாள் (வைகுந்த விண்ணகரம்), ஸ்ரீமாதவ பெருமாள் (திருத்தேவனார் தொகை), ஸ்ரீபார்த்தசாரதி (திருபார்த்தன்பள்ளி), ஸ்ரீகோபாலன் (திருக்காவளம்பாடி) ஆகிய பதினொரு திவ்ய தேசங்களைச் சேர்ந்த இறைமூர்த்திகளும் மணிமாடக் கோயில் உள்ள பந்தலில் எழுந்தருள்வார் பிறகு திருமங்கையாழ்வார் தனது தேவியான குமுதவல்லி நாச்சியாருடன் பந்தலில் எழுந்தருளி ஒவ்வொரு பெருமாளிடம் சென்று மங்களா சாசனம் நடைபெற உள்ளன.

இதைத் தொடர்ந்து இரவு 11 மணியளவில் 11 பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி நடைபெற உள்ளன. திருமங்கையாழ்வார் நாச்சியாருடன் ஹம்சவாகனத்தில் எழுந்தருள்வார். பின்பு வெண்குடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெற உள்ளன. 13.2.21 மாலை திருவெள்ளக்குளம், திருத்தேவனார்தொகை, திருவாலி ஆகிய தலங்களில் திருமங்கையாழ்வார் எழுந்தருள, திருப்பாவை, திருமஞ்சன சாற்றுமறையும் நடைபெற உள்ளன. பின்னர், ஆழ்வார் திருநகரியை அடைந்த பிறகு ஸ்ரீவயலாலி மணவாளன் கருட சேவையும், திருமங்கையாழ்வார் மங்களா சாசனமும் நடைபெறும்.


The uniqueness of this festival is that all the 11 emperumans are giving darshan in garudavahana, Sri. Thirumangai azhwar in hamsavahana led by Sri. Manavalamamunigal in seshavahana in one row through the streets of Thirunangur that cannot be seen anywhere else. Our seven emperumans are part of the 11 emperumans. Please note that the 11 Garuda Seva committee is functioning to meet out the festival expenses. However the below expenses are not covered or covered partially covered by the committee and we seek your financial assistance for our 7 temples.


I request you to select any one of the above item either in part or in full and may send your donation in the name of the T.V.V.S.S.K.TRUST , and mail to 4/83-A, Sri.Purushothama Perumal Koil Street, Nangoor, Sirkali-Tk. You may transfer the funds to trust.

  1. SB A/C No.608801152764, ICICI, Bank, Mailaduthurai Branch, Code No.6088, IFSC Code no.ICIC0006088
  2. SB A/c No.6027064799, Indian Bank, Thenapthi Branch Code No.S108, IFSC Code No: IDIB000S108