Saturday 15 August 2020

ஸ்ரீ ஜெயந்தி - திருவவதாரச் சிறப்பு பாசுரங்கள்

Lord Krishna facts | Indian Mythology

Three Ways Vasudeva Is A Hero – Krishna's Mercy

வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம் கலந்து அளறாயிற்றே.

அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகளமைந்த மாளிகைகள் நிறைந்த திருக்கோட்டியூர்.கண்ணன், கேசவன், நம்பி பிறந்த ஈனில்; அதாவது, அழகிய ஒளி நிறைந்த கண்களை உடையவனே, கேசி என்னும் குதிரை வடிவில் வந்த அசுரனை வதம் புரிந்தவனே, கேசவா, அண்டக் குலத்துக்கதிபதியானவனே! நீ திருவவதாரம் புரிந்த கோகுலமானது, கண்ணன் பிறந்தது மதுரா நகரின் சிறைச்சாலையில் என்றாலும், அது யசோதாவுக்குத் தெரியாது. அவள் கண்ணன் தனக்குப் பிறந்த குழந்தை என்றே நினைத்திருந்தாள்.கோகுலத்தில் கண்ணன் பிறந்த நன்னாளை முன்னிட்டு ஆயர்களனைவரும் நறுமண எண்ணெயையும், வண்ணப் பொடிகளையும் எதிர்படுவோர் அனைவர் மேலும் ஒருவர் மேல் ஒருவர் தூவி மகிழ்ச்சி ஆரவாரம் புரிந்தனர்.



வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு

திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்

எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்குஎத்தனை போதும் இருந்தேன்

நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்


விளக்கம் 


கண்ணபிரான் தாரார்தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம் அவ் வெண்ணெய்பட்டு மொச்சைநாற்றம் வீசும். அதனோடு விளையாடப் போனால் அதன்மேல் புழுதியும் படியும, இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவுதின்னும் அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம், இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல்   நீராடவழைக்கின்றன ளென்க விளையாடுபுழுதி – வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க, ‘உண்ட இளைப்பு’ என்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க.  புளிப்பழம் – எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர், சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய்.

KARPAGAM: கோவலனாய் வெண்ணை உண்ட வாயன்!

அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து

சொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ

செப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்

சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்இங்கே வாராய்.

விளக்கம் 

 ‘இப்பையல் அழுக்குடம்பனாயிரா நின்றான்’ என்று இடைச்சிகள் ஏசுவதற்கு இடமறும்படி நீராட வருவாயாகில் வேண்டிய பஷணங்கள் தருவேனென்கிறான்.  அப்பம் – ‘அபூபம்’ என்ற வடசொற்சிதைவு.  சிறுமை + உண்டி – சிற்றுண்டி.  “ஈறுபோதல்..தன்னொற்றிரட்டல்” “சிற்றுண்டை” என்றும் பாடமாம்.  (“சிறுபுறம்” என்றவிடத்தில்) சிறு – ‘சிறுமை’ என்ற பண்பினடி. புறம் பேசுதல் – மறைவில் குற்றத்தைச் சொல்லுதல்.


வெண்ணெய் உண்ட வாயன் – வல்லமை

 திண் ஆர் வெண்சங்கு உடையாய்!*  திருநாள் திரு வோணம் இன்று எழு நாள்*  முன்- 
பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப்*  பல்லாண்டு கூறுவித்தேன்*
கண்ணாலம் செய்யக்*  கறியும் கலத்தது அரிசியும் ஆக்கி வைத்தேன்* 
கண்ணா! நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல்*  கோலம் செய்து இங்கே இரு*

திண் ஆர் - திண்மைபொருந்திய;
வெண் சங்கு - வெண்சங்கத்தை;
உடையாய் - (திருக்கையில்) ஏந்தியுள்ளவனே;
கண்ணா - கண்ணபிரானே;
திருநாள் - (நீ பிறந்த) திருநக்ஷத்திரமாகிய;

திண்ஆர் - சத்ருநிரஸநத்தில் நிலைபேராமல் நின்று முழங்கும் திண்மையைச் சொல்லுகிறது. யசோதைப்பிராட்டி கண்ணனைநோக்கி இப்பாசுரஞ் சொல்லியது. விசாகாநக்ஷத்திரத்தினன்று என்றுணர்க. பண் - இசைப்பாட்டு. இற்றைக்கு ஏழாவது நாளாகிய உன் ஜந்மநக்ஷத்திரத்தில் உனக்கு விசேஷமான மங்களகாரியங்களைச் செய்வதற்காக மங்கலப் பாட்டுக்களையும் பாடுவித்தேன்; அன்றைக்கு வேண்டிய வஸ்துக்களையும் இப்போதே ஸித்தப்படுத்தி வைத்திருக்கிறேன்; ஆகையால் இனி நீ சாதித்தொழிலைத் தவிர்ந்து உத்ஸவிக்ரஹம் போல் உன்னை அலங்கரித்துக்கொண்டு இவ்விடத்திலேயே வீற்றிரு என்று யசோதைப்பிராட்டி வேண்டுகின்றாள். முளையட்டுதல் - கல்யாணாங்கமாக நவதானியங்களைக் கொண்டு பாலிகை வைக்கை. கண்ணாலம் - மரூஉமொழி.

Damodara-lila – Mother Yashoda binds Lord Krishna

No comments:

Post a Comment