Saturday, 19 September 2020

புரட்டாசி திருவோணம் - திருமலை திருப்பதி


ஸர்வ தர்மான் பரித்யஜ்ய 

மாமேகம் சரணம் வ்ரஜ, 

அஹம் த்வா சர்வ பாபேப்யோ 

மோக்ஷயிஷ்யாமி மா சுச



பொய்கையாழ்வார்

ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி

அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி,

உரைநூல் மறையுறையும் கோயில், - வரைநீர்

கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,

உருவமெரி கார்மேனி ஒன்று.


ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச்செய்த. 

இரண்டாம் திருவந்தாதி

சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்,

கொன்ற திராவணனைக் கூறுங்கால், - நின்றதுவும்

வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம்

வாயோங்கு தொல்புகழான் வந்து.


ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார்

மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,

நூற்பால் மனம்வைக்க நொய்விதாம்,- நாற்பால

வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,

பாதத்தான் பாதம் பணிந்து.


திருமழிசைபிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி


இவையா பிலவாய் திறந்தெரி கான்ற

இவையா எரிவட்டக் கண்கள் - இவையா

எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான்,

அரிபொங்கிக் காட்டும் அழகு.


பெரியாழ்வார் திருமொழி


சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்

எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்

வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற

கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா.


நம்மாழ்வார் திருவிருத்தம்

வால்வெண் ணிலவுல காரச் சுரக்கும்வெண் திங்களென்னும்,

பால்விண் சுரவி சுரமுதிர் மாலை, பரிதிவட்டம்

போலும் சுடரட லாழிப்பி ரான்பொழில் ஏழளிக்கும்

சால்பின் தகைமைகொ லாம்தமி யாடி தளர்ந்ததுவே.


திருமங்கையாழ்வார் சிறிய திருமடல்


ஆராய்வாரில்லை அழல்வாய் மெழுகு போல் நீராய் உருகும் என்னாவி நெடுங்கண்கள்

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்

தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின்,

இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே, கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நொடிதாகும்,

என்னிதனைக் காக்குமா சொல்லீர்? இதுவிளைத்த     


திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான்

  


அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த

விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்

நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான்திருக்

கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே.


மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்

அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில்

உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே.


நாச்சியார் திருமொழி



தையொரு திங்களும் தரைவிளக்கித்

தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்

ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து

அழகினுக் கலங்கரித் தனங்கதேவா

உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி

உன்னையு மும்பியையும் தொழுதேன்

வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை

வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.



மத்தநன் னறுமலர் முருக்கமலர்

கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி

தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து

வாசகத் தழித்துன்னை வைதிடாமே

கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு

கோவிந்த னென்பதோர் பேரேழுதி

வித்தகன் வேங்கட வாணனென்னும்

விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே


பெருமாள் திருமொழி - நான்காந் திருமொழி

குலசேகராழ்வார்


ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்

ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்

கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து

கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே


ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்

தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே


பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்

துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்

மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்

பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே


ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்

கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு

பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து

செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே


கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து

இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்

எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்

தம்பமாய் நிற்கும் தவமுடையே னாவேனே


மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும்

அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்

தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்

அன்னனைய பொற்குவடா மருந்தவத்த னாவேனே


வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்

கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்

தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்

கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே



பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்

முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்

வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்

நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்

அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே


உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்

அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்

செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்

எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே


மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்

பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி

கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன

பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே


No comments:

Post a Comment