Sunday 18 October 2020

மஹாலக்ஷ்மி அஷ்டகம்

 மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம் |

 Mahalakshmi Ashtakam lyrics



#மஹாலக்ஷ்மி_அஷ்டகம்

#அஷ்டகம்_என்றால்

எட்டுப் பொருள்களைக் கொண்டது என்பது பொருள். ஈரடிகளாக வரும் இந்த ஸ்லோகம் இந்திரனால் மஹாலக்ஷ்மியை துதித்து “பத்ம புராணத்தில்” பாடப்பட்டது.

இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை ஒரு முறை, இரு முறை, மூன்று முறைகளால் சொல்வதால் ஏற்படும் பலன்களைக் குறிப்பது.

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜித
ஷங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமஸ்துதே

படைப்பின் மூல காரணங்களாக விளங்குபவளும், ஸ்ரீபீடத்தில் வைத்து ஸூரர்களால் வணங்கப்படுபவளும், அழகிய கரத்தில் சங்கையும், சக்கரம், கதை வைத்திருப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், கோலாஸூரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவளும், நம் சகல பாவங்களையும் நீக்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

ஸர்வக்நே சர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வதுக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

அனைத்தையும் அறிந்தவளும், அணைத்து வரங்களைக் கொடுப்பவளும், துஷ்ட குணங்களை அளிப்பவளும், துக்கங்களை அழிப்பவளும் வணங்குகிறேன்.

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

சாதனைகள் புரிந்து நல்ல முறையில் வாழ புத்தியை அளிப்பவளும், இந்த உலகில் செழிப்புடன் வாழ்ந்து அவளின் பாத கமலங்களை அடைய அருள்பவளும், மந்திரங்களின் சூட்சும ஸ்வரூபமாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்நே யோக ஸ்ம்பூ தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

ஆதியந்தம் இல்லாதவளும், சகல விஷயங்களுக்கு பின்னால் இருப்பவளும், யோகமாக பிறந்தவளும், யோகத்தால் இணைந்தவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

அணைத்து விஷயங்களுக்கும் பின்னால் சூட்சும வடிவத்தில் ஆதார சக்தியாக விளங்குபவளும், பயங்கர வடிவத்தில் ருத்ரணியாக விளங்குபவளும், பெரும் சக்தியின் பிறப்பிடமாக விளங்குபவளும், அனைத்து பாபங்களையும அழிப்பவளும் மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்பிரஹ்ம ஸ்வரூபினி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமஸ்துதே

தாமரை ஆசனத்தில் சாந்தம் தவழும் முகத்துடன் அமர்ந்திருப்பவளும், உயர்ந்த ப்ராமணியாக விளங்குபவளும், இப்பிரஞ்சத்தின் உயர்ந்த கடவுளாக, தாயாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத்ஸ்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமஸ்துதே

தூய்மையின் அம்சமான வெள்ளை உடையை அணிந்திருப்பவளும், பலவித ஆபரணங்கள் அணிந்திருப்பவளும்,
பிரபஞ்சத்தில் தாய்க்கு தாயாக காப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய : படேத் பக்திமான் நர :
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

யார் ஒருவர் இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை பக்தியுடன் சொல்கிறார்களோ அவர்கள் சகலவிதமான சம்பத்துக்களையும் பெற்று அன்னையின் காலடிகளை அடைவார்கள்.

ஏக காலம் படேந் நித்யம் மஹா பாப விநாஷணம்
த்விகாலம் ய : படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:

இந்த ஸ்லோகத்தை ஒரு முறை சொன்னால் அணைத்து பாவங்களும் நீங்கும்.
இரு முறை சொன்னால் தனங்களையும், தான்யங்களையும் அடைவோம்.

த்ரிகாலம் ய படேந்நித்யம் மஹா ஷத்ரு விநாஷனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்ன வரதா ஸூபா

மூன்று முறை சொன்னால் நம்முடைய எதிரிகள் அழிவார்கள்.
தினம் இதை கூறி மஹாலக்ஷ்மியின் பரிபூரண அருள் பொங்கிய சாந்த வடிவத்தில் நாம் சகல அனுக்ரஹங்களையும் பெறுவோம்.

அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம்

 

அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம்

00 ashtalakshmi cover

Ashta Lakshmi Stotra

அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம்

ஆதிலக்ஷ்மி

ஸுமனஸ வந்தித ஸுந்தரி மாதவி, சந்த்ர ஸஹொதரி ஹேமமயே
முனிகண வந்தித மோக்ஷப்ரதாயனி, மஞ்ஜுல பாஷிணி வேதனுதே |
பந்கஜவாஸினி தேவ ஸுபூஜித, ஸத்குண வர்ஷிணி ஶாந்தியுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஆதிலக்ஷ்மி பரிபாலய மாம் || 1 ||

01 Adhi Lakshmi

தான்யலக்ஷ்மி

அயிகலி கல்மஷ நாஶினி காமினி, வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர ஸமுத்பவ மங்கள ரூபிணி, மந்த்ரனிவாஸினி மந்த்ரனுதே |
மங்களதாயினி அம்புஜவாஸினி, தேவகணாஶ்ரித பாதயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, தான்யலக்ஷ்மி பரிபாலய மாம் || 2 ||

02 Dhanya Lakshmi

தைர்யலக்ஷ்மி

ஜயவரவர்ஷிணி வைஷ்ணவி பார்கவி, மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸுரகண பூஜித ஶீக்ர பலப்ரத, ஜ்ஞான விகாஸினி ஶாஸ்த்ரனுதே |
பவபயஹாரிணி பாபவிமோசனி, ஸாது ஜனாஶ்ரித பாதயுதே
ஜய ஜயஹே மது ஸூதன காமினி, தைர்யலக்ஷ்மீ பரிபாலய மாம் || 3

03 Dhairya Lakshmi

கஜலக்ஷ்மி

ஜய ஜய துர்கதி னாஶினி காமினி, ஸர்வபலப்ரத ஶாஸ்த்ரமயே
ரதகஜ துரகபதாதி ஸமாவ்றுத, பரிஜன மமந்டித லோகனுதே |
ஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித ஸேவித, தாப நிவாரிணி பாதயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, கஜலக்ஷ்மீ ரூபேண பாலய மாம் || 4 ||

04 Sri Gaja Lakshmi.

சந்தானலக்ஷ்மி

அயிகக வாஹினி மோஹினி சக்ரிணி, ராகவிவர்தினி ஜ்ஞானமயே
குணகணவாரதி லோகஹிதைஷிணி, ஸப்தஸ்வர பூஷித கானனுதே |
ஸகல ஸுராஸுர தேவ முனீஶ்வர, மானவ வம்தித பாதயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, ஸந்தானலக்ஷ்மீ பரிபாலய மாம் || 5||

05Sri Santhana Lakshmi.

விஜயலக்ஷ்மி

ஜய கமலாஸினி ஸத்கதி தாயினி, ஜ்ஞானவிகாஸினி கானமயே
அனுதின மர்சித கும்கும தூஸர, பூஷித வாஸித வாத்யனுதே |
கனகதராஸ்துதி வைபவ வம்தித, ஶம்கரதேஶிக மான்யபதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, விஜயலக்ஷ்மீ பரிபாலய மாம் || 6 ||

06 Sri Vijaya Lakshmi.

வித்யாலக்ஷ்மி

ப்ரணத ஸுரேஶ்வரி பாரதி பார்கவி, ஶோகவினாஶினி ரத்னமயே
மணிமய பூஷித கர்ணவிபூஷண, ஶாந்தி ஸமாவ்றுத ஹாஸ்யமுகே |
நவநிதி தாயினி கலிமலஹாரிணி, காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, வித்யாலக்ஷ்மீ ஸதா பாலய மாம் || 7 ||

07 Sri Vidya Lakshmi.

தனலக்ஷ்மி

திமிதிமி திம்திமி திம்திமி-திம்திமி, துந்துபி நாத ஸுபூர்ணமயே
குமகும கும்கும கும்கும கும்கும, ஶம்க நிநாத ஸுவாத்யனுதே |
வேத பூராணேதிஹாஸ ஸுபூஜித, வைதிக மார்க ப்ரதர்ஶயுதே
ஜய ஜயஹே மதுஸூதன காமினி, தனலக்ஷ்மி ரூபேணா பாலய மாம் || 8 ||

08 Sri Dhana Lakshmi.

A powerful affirmation to be made on a daily basis. (Tamil)

Mahalakshmi affirmation 01

A powerful affirmation to be made on a daily basis. (Hindi)

09 Lakshmi Affirmation

துர்கை ஸ்துதி



ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே! 

சரண்யே திரயம்பகே கௌரீ நாராயணி நமோஸ்துதே!!


சரணாகத தீனார்த்த பரித்ராண பராயனே. 

சர்வ் ஸ்யார்த்தி ஹரேதேவி நாராயணி நமோஸ்துதே.


ஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வ சக்தி ஸமன்விதே. 

பயேப்ப்யஸ் த்ராஹி நோ தேவி துர்க்கா தேவி நமோ(அ)ஸ்துதே


ரோகானசேஷா நபஹம்ஸி துஷ்டா ருஷ்டா து காமான் ஸகலானபீஷ்டான்

த்வாமாச்ரிதானாம் ந விபந்நராணாம் த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம்ப்ரயாந்தீ 6


ஸர்வா பாதா ப்ரசமனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்வரி

ஏவ மேவ த்வயா கார்ய மஸ்மத்வைரி விநாசனம்          


ஏதத்தே வதனம் ஸௌம்யம் லோசனத்ரய பூஷிதம் | பாது ந: ஸர்வபீதிப்ய: காத்யாயனி நமோஸ்துதே 


ஜ்வாலாகராளம் அத்யுக்ரம் அசேஷாஸுரஸூதனம் |

த்ரிசூலம் பாதுநோ பீதே:  பத்ரகாளி நமோஸ்துதே ||


ஹினஸ்தி தைத்ய தேஜாம்ஸி ஸ்வனேனாபூர்ய யா ஜகத் |

ஸா கண்டா பாது நோ தேவி பாபேப்யோ ந: ஸுதாநிவ ||


ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ

துர்க்கா க்ஷமா சிவா தாத்ரீ ஸ்வதா ஸ்வாஹா நமோஸ்துதே ||


ப்ரணதாநாம் ப்ரஸீத த்வம் தேவி விச்வார்த்தி ஹாரிணி |

த்ரைலோக்ய வாஸினாம் ஈட்யே லோகானாம் வரதா பவ ||

ஸ்ரீ மகாலட்சுமி ஸ்துதி




பத்மாசனாம் பத்மகராம் பத்ம மாலா விபூஷனாம் 
க்ஷீரஸா கரஸம் பூதாநாம் ஹேம வர்ண ஸமப்ரபாம் 


க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்|. 

பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே|.


நமோ(அ)ஸ்து நாளிக நிபா(4)னனாயை நமோ(அ)ஸ்து  

நமோஸ்து நாராயண வல்லபா4யை

நமோ(அ)ஸ்து ரத்னா கர சம்பவாயை

நமோ(அ)ஸ்து லக்ஷ்மியை ஜகதாம் ஜனன்யை


ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே தவள தராம்ஸுக கந்த மால்ய ஸோபே! 

பகவதி ஹரி வல்லபே மனோக்ஞே த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்!


விஷ்ணு-பத்நீம் க்ஷமாம் தேவீம் மாதவீம் மாதவ-ப்ரியாம் 

லக்ஷ்மீம் ப்ரிய-ஸகீம் தேவீம் நமாம் யச்யுத வல்லபாம்


க்ஷீத்த லக்ஷ்மீர் மோக்ஷ லக்ஷ்மீர் ஜயலட்சுமி சரஸ்வதி

 ஸ்ரீலட்சுமி  வர லட்சுமீச்ச ப்ரசன்னா பவ ஸர்வதா


பத்மாஸனே பத்மகரே ஸர்வலோகைக பூஜிதே. 

நாராயணே ப்ரியே தே வீஸுப்ரீதா பவ ஸர்வதா


ஸர்வ மங்கள மாங்கல்யே ஸர்வ பாப பிராணஸினி 

ஸர்வபூதி கரே தேவி ஸூ ப்ரிதா பவ ஸர்வதா


வரலட்சுமீர் மஹாதேவி சர்வாபரண பூஷிதா

கேஹெஷ்மின்னு பூஷிதா தேவி வ சே த் சௌபாக்கிய காரிணி 


ஆயுராரோக்கியமைஸ்வரியம் புத்ரபௌத்ராதிகாள் வராந்

திருஷ்யம்   மஹாலட்சுமி ப்ரயச்ச கருணாநிதே 


Saturday 17 October 2020

சரஸ்வதி தியான ஸ்லோகம்


 

1. ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா

2. ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை

3. சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்
வல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்

4. பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன

5. சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
நமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்

6. பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம

7. பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ
மம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா

8. சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ
ஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே

9. பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி
அவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே

10. தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச
ஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம்

ராகு கால துர்க்கா அஷ்டகம்

 


ராகு கால துர்க்கா அஷ்டகம்
( ஹரிவராஸனம் மெட்டில் பாடவும் )
வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத்தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
உலகை யீன்றவள் துர்க்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக்காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்திய மானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
செம்மையானவள் துர்க்கா ஜெயமுமானவள்
ஆம்மையானவள் அன்புத் தந்தை யானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
உயிறு மானவள் துர்க்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமை யானவள்
பயிறு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையு மானவள் இன்பத் தோனி யானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
குருவு மானவள் துர்க்கா குழந்தை யானவள்
குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவு மானவள் துர்க்கா திரிசூலி யானவள்
திலகமாய் என்றும் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே
கருணை துர்க்கையே இதயக் கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீர சுகுண துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

நவராத்திரி கொலு படிகள்

 நவராத்திரியில் கொலு வைக்கும் முறை


ஒன்பது படிகள் :
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூன்றறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடமி பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறு அறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டுமி.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

நவராத்திரியில் உகந்தவை












(இந்த அட்டவணையை க்ளிக் செய்தால் விபரம் பெரிதாகத் தெரியும்)

நவராத்திரி பதினெட்டு நாமாவளி


 

1. துர்க்கா தேவி

 
ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம
 
2. லட்சுமி ஸ்ரீதேவி
 
ஓம் மகாலக்ஷ்ம்யை நம
ஓம் வரலெக்ஷ்ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம
 
3. சரஸ்வதி தேவி
 
ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம



 
மூன்று தேவியருக்கான நவராத்திரி ஸ்லோகம்:
 
கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!

Friday 2 October 2020

வெங்கடேஸ்வர சுப்ரபாதம்

Venkateswara suprabhatam

 


கௌசல்யா சுப்ரஜா ராம

பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு

மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பத்மநாப புரு÷ஷாத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே


 

Tuesday 29 September 2020

ஹனுமான் ஸ்துதி



மனோஜவம் மாருத துல்யவேகம் 
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் 
வாதாத்மஜம் வானரயூதமுக்யம்
 ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி.

மனோவேகத்தையும் காற்றிற்கு நிகரான வேகத்தையும்
 கொண்டவரும், இந்திரியங்களை (புலன்களை) வென்றவரும், 
புத்திமான்களிடையே, அறிஞர்களிடையே முதன்மையானவரும்,
 வாயுதேவனுடைய புத்திரரும், வானரச்சேனையில் மிக 
முக்கியமானவரும், ஸ்ரீ ராமதூதருமான அந்த 
ஆஞ்சநேயரைத் தலையாலே வணங்குகிறேன்.



Sunday 27 September 2020

புரட்டாசி ... ஏகாதசி... திருவோண... நந்தா விளக்கு





 புரட்டாசி விசேஷம். ஏகாதசி விசேஷம். திருவோண நட்சத்திர நாள் விசேஷம். இந்த மூன்றும் இணைந்த மகத்துவம் மிக்க நாளில், பெருமாளை மனதார வழிபாடுங்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருவோணத்தன்று தீபம் ஏற்றப்படும். இதை சாஸ்ரதீப அலங்கார சேவை என்பர். அன்று ஏழுமாலையானின் உற்சவரான மலையப்பசாமி ஊர்வலமாக 4 மாடங்கள் வழியாக ஊஞ்சல் மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கு ஆயிரத்தெட்டு திரிகளை கொண்ட நெய் விளக்கு ஏற்றப்படும். அப்போது திருமலையே ஜோதி மயமாக காட்சி தரும்.

பொய்கை ஆழ்வார்

 

பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதியின் முதல் பாசுரம்:

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று


(3183)

எனத் தொடங்குகின்றது. உலகத்தை விளக்கு ஆகவும் (அகல்), அந்த விளக்கிற்கு நெய்யாகக் கடலையும் ஒளியாகக் கதிரவனையும் வைத்து மாலையாகப் பாசுரங்களைத் திருவடிகளுக்கு அணிவிக்கின்றார் பொய்கையார். எதற்காக என்றால் துன்பக்கடலில் இருந்து நீங்குவதற்காக என்கின்றார்.

ஞான விளக்கு

இப்பாசுரத்தைப் போன்று பூதத்து ஆழ்வாரும்,

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்


(3284)

எனப் பாடி, இரண்டாம் திருவந்தாதியைத் தொடங்குகின்றார். தம் தமிழை ஞானத்தமிழ் என்றும், அது திருமாலுக்கு உரியது என்றும் அருளியுள்ளார்.

இப்பாசுரத்தில் அன்பு என்னும் விளக்கு ஆர்வம் என்னும் நெய் ஊற்றப்பட்டு, மனம் என்னும் திரி இட்டு ஞானம் என்னும் சுடர்விளக்காக ஏற்ப் படுவதாகப் பாடுகின்றார் ஆழ்வார்.

பேயாழ்வார் அருளியது மூன்றாம் திருவந்தாதி. இது இயற்பாவில் இடம் பெற்றது. 100 வெண்பாக்கள் இதில் உள்ளன. இத்திருநூல் திருக்கண்டேன் எனத் தொடங்கி, சார்வு நமக்கு என்றும் எனத் தொடங்கும் வெண்பாவில் முடிகின்றது. இது திருக்கோவலூரில் அருளிச் செய்யப்பட்டது.

பேயாழ்வார்

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று


Decoding the Nandha Villaku

During Every Saturday of the Purattasi month, it is said Lord Sri Venkatesa expecting His devotees to come closer to his consort hills. And for those who could not afford to travel at length, he beams himself through the light of this specific ViLakku. Thus, a devotee getting His Lord’s Darshan without climbing the seven hills of Thirumalai Tirupati. Also, the carbon emanated through the mixture of rice flour and cow’s ghee is said to remove all the ill radiations and negative vibrations from one’s home and that too when one recites aloud the name of the Lord God when the lighted cotton soak goes off. To make it worthy, devotees used to recite the Lord Gods name several times.

On this day, the Govinda Nama sankeerthanam reverberates on the hills of Venkatam as the sevArthees meditate on the dheepam and climb the hills to have the sevai of this eternal dheepam. Azhwars call it Nanada Vilakke.

Decoding the Maa Vilakku Recipe


Ingredients

  •  Raw Rice – 1 cups
  •  Jaggery – ½ cup
  •  Cardamom – 4nos
  • benzoine known as Pacchaikarpooram a pinch
  • Grated coconut – 2 table spoons
  •  Ghee – 2 table spoons
  •  Wick – 4 inch length

Method

  • Wash and soak the rice for 15 minutes.
  • Drain well and spread on a white cloth.
  • Grind the rice in a heavy duty mixer a little at a time and sieve.
  • When all the rice is ground, mix with powdered jaggery’, grated coconut, Pachaikarporam and cardamom
  • On a silver plate shape this dough in to the shape of a lamp or ViLakku. Pour ghee and place a wick.
  • Light the lamp and wait until it completes burning.
  • Chant slokas and Govinda Nama.
  • When the lamp is about to go off, do offerings, neivedhyam of Milk or Fruits. Afterwards, remove the burnt wick, mix the dough properly, and distribute the prasadam.